Friday, 5 August 2022

வண்டினங்கள்….,

 அண்டர் ஆனவர் வானவர்கோனுக்கு என்று*  அமைத்த சோறு அது எல்லாம் உண்டு* 

கோநிரை மேய்த்து அவை காத்தவன்*  உகந்து இனிது உறை கோயில்*

கொண்டல் ஆர் முழவின் குளிர் வார் பொழில்*  குல மயில் நடம் ஆட* 

வண்டு தான் இசை பாடிடும் நாங்கூர்*  வண்புருடோத்தமமே.     

குளிர் வார் பொழில் - குளிர்ந்து பரந்த சோலைகளிலே,
கொண்டல் ஆர் முழவில் - மேகங்களினுடைய மிக்க கோஷம்உண்டாகும் போது
குலம் மயில் நடம் ஆட - கூட்டங் கூட்டமான மயில்கள் கூத்தாடப் பெற்றதும்,
வண்டு இசைபாடிடு - வண்டுகள் (மயில்களின் கூத்தாட்டத்திற்குத் தகுதியாக) இசைபாடப் பெற்றதுமான
நாங்கூர் - திருநாங்கூரில்

    Our lord who ate the food 
    that cowherds made for Indra the king of the gods in the sky, 
    and grazed the cows and protected them from the storm
    stays happily in the temple of Vaṇpurushothamam in Nāngur 
    where peacocks dance in the lovely cool groves
    when the clouds roar like drums and the bees sing their music. 
    
 
                           வண்டினங்கள்….,

       
                                 பல்லவி

               வண்டினங்கள் இசை பாடும் சோலைகள் நிறைந்த
               தண்மதி உலவும் புண்ணிய க்ஷேத்திரம்

                                  அனுபல்லவி

               கொண்டல்கள் முழங்கிட மயில்கூட்டம் நடனமிட
               கண்கவரழகுடன் திகழும் திருத்தலம்

                                   சரணம்

              விண்ணாளும் சுரபதிக்குப் படைத்த உணவையெல்லாம்
              கண்ணபிரன் கேசவன் உண்டுவிட்டு இளைப்பாறி
              கொண்டு வந்த ஆநிறைக் கூட்டத்தை மேயவிட்டு
              மண்ணுலகில் நின்ற தலம் வண்புருடோத்தமமே
               


                                                                  

No comments:

Post a Comment