வண்ணமயமான….
பல்லவி
வண்ணமயமான வரலக்ஷ்மியுனைத் துதித்தேன்
கண்ணசைவில் கருணை தந்து எனக்கருள வேண்டுமென
அனுபல்லவி
கண்ணன் கேசவன் திருமார்பிலுறைபவளே
மண் மகளே மாயே மறைபொருள் நீயே
சரணம்
தண்மதி முகத்தாளே தாமரைக் கரத்தாளே
விண்ணோரும் மண்ணோரும் வியந்து போற்றுகின்ற
பெண்ணணங்கே பேரழகே பாற்கடலிலுதித்தவளே
புண்ணியம் செய்தோர்க்கு கண்ணெதிரில் காட்சி தரும்
No comments:
Post a Comment