என்னால் தானே….
பல்லவி
என்னால் தானே உனக்குப் பெருமை
சொன்னால் புரியாதோ கேசவா உனக்கு
அனுபல்லவி
பன்னக சயனனே பாற்கடல் வாசனே
பொன் மகளைத் தன் மார்பில் சூடிய பரந்தாமா
சரணம்
அன்னாளில் கல்லைக் காரிகையாய்ச் செய்தும்
இன்னுமொரு அபலைக்கு சேலை தந்து உதவிடினும்
என்னாளும் எனைப் போன்ற வீணருனைத் துதிப்பதனால்
உன்னை உயர்வாக ஊர் போற்றி மதிக்கிறது
No comments:
Post a Comment