பரம்பொருள் நீயே…..
பல்லவி
பரம்பொருள் நீயே ஶ்ரீமன் நாராயணா
கரம் சிரம் பணிந்துனை தினம் துதித்தேன்
அனுபல்லவி
அரனயன் முனிவர்கள் அமரேந்திரனும்
நரர் சுரர் நாரதரனைவரும் வணங்கிடும்
சரணம்
அரவிந்த நாபனே ஆதிமூலமே
திருமகளை மார்பில் வைத்திருக்கும் ஶ்ரீதரனே
திருமாலே கேசவனே தீனசரண்யனே
திருபாற்கடலில் பள்ளிகொண்டிருப்பவனே
கரங்களில் சங்கும் சக்கரமும் கதையும்
வாளும் சாரங்கமுமேந்தும் மாதவனே
வரந்தரும் கரமும் அபய கரமும் நீட்டும்
பரந்தாமனே எனை ஆண்டருள்வாயே
No comments:
Post a Comment