62 ஜந்தோ: ஸக்ருத ப்ரணமதோ ஜகதீட்யதாம் ச
தேஜாஸ்விதாம் ச நிஶிதாம் ச மதிம் ஸபாயாம் |
காமாக்ஷி மாக்ஷிக ஜரீமிவ வைகரீம் ச
லக்ஷ்மீம் ச பக்ஷ்மலயதி க்ஷண வீக்ஷணம் தே ||62||
जन्तोः सकृत्प्रणमतो जगदीड्यतां च
तेजास्वितां च निशितां च मतिं सभायाम् ।
कामाक्षि माक्षिकझरीमिव वैखरीं च
लक्ष्मीं च पक्ष्मलयति क्षणवीक्षणं ते ॥62॥
காமாக்ஷியே! உனது ஒருக்ஷணப் பார்வையானது உன்னை நமஸ்கரிக்கும் மனிதனுக்கு உலகத்தால் கொண்டாடத்தக்க நிலைமையையும், தேஜஸ்ஸையும், சபையில் கூர்மையான புத்தியையும் , தேனின் பெருக்குப்போன்ற வாக்கையும், செல்வத்தையும் அதிகரிக்கச் செய்கிறது.
மனம் மகிழச்…..
பல்லவி
மனம் மகிழச் செய்திடும் தாயே காமாக்ஷி
உனதருள் வேண்டியுன் மலரடி பணிந்தேன்
அனுபல்லவி
அனந்த சயனன் கேசவன் சோதரி
கனக மய மேருவில் வீற்றிருப்பவளே
சரணம்
உனது கடைவிழிப் பார்வையடைபவர்க்கு
அனைவருமுலகில் கொண்டாடும் நிலையும்
தனம் புகழ் கூர்மதி தேனெனும் நல்வாக்கும்
அனைத்து செல்வாக்கும் காந்தியும் கிடைத்திடும்
No comments:
Post a Comment