முன்னை வண்ணம் பாலின் வண்ணம்* முழுதும் நிலைநின்ற*
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம்* வண்ணம் எண்ணுங்கால்*
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம்* புரையும் திருமேனி*
இன்ன வண்ணம் என்று காட்டீர்* இந்தளூரீரே!
திருமங்கையாழ்வார்திருவடிகளேச ணம்
என்ன வண்ணமுன் வண்ணம்……
பல்லவி
என்ன வண்ணமுன் வண்ணம் திண்ணமாய் நானறியேன்
சென்ன கேசவனே மறை போற்றும் மாதவனே
அனுபல்லவி
முன்னம் கண்ணனாய் நீலவண்ணனானாய்
பின்னுமரங்கனாய் பச்சை வண்ணனானாய்
சரணம்
இன்னும் ராமனாய் கருமேகவண்ணனுமாய்
சென்னிறப் பொன்மேனி தேகளீசப் பெருமாளாய்
மன்னுபுகழ் காஞ்சியில் பவளவண்ணனாகவும்
இன்ன வண்ணமென்று சொல்வீர் இந்தளூர்ப் பெருமாளே
No comments:
Post a Comment