ஜாகர்தி தேவி கருணாஶுக ஸுந்தரீ தே
தாடங்க ரத்னருசி தாடிம கண்டஶோணே |
காமாக்ஷி நிர்பர கடாக்ஷ மரீசி புஞ்ஜ-
மாஹேந்த்ர நீலமணி பஞ்ஜர மத்யபாகே ||91||
जगर्ति देवि करुणाशुकसुन्दरी ते
ताटङ्करत्नरुचिदाडिमखण्डशोणे ।
कामाक्षि निर्भरकटाक्षमरीचिपुञ्ज-
माहेन्द्रनीलमणिपञ्जरमध्यभागे ॥91॥
ஹே காமாக்ஷி ! உனது கருணையாகிற கிளியானது, தாடங்களிலுள்ள ரத்னங்களின் காந்தியாகிற மாதுளங்கனியின் துண்டங்களோடு சிகப்பாயிருக்கும் உனது பூர்ணமான கடாக்ஷத்தின் காந்திகளுடைய கூட்டமாகிற இந்திர நீல ரத்னத்தாலான கூட்டின் மத்தியில் விளையாடிக் கொண்டிருக்கிறது!
மனதாரத்துதிக்குமெனை…..
பல்லவி
மனதாரத்துதிக்குமெனைக் காத்தருள்வாய் காமாக்ஷி
கனகமயமான மேருவிலமர்ந்திருப்பவளே
அனுபல்லவி
வினதையின் மகன் துதிக்கும் கேசவன் சோதரியே
அனங்கனின் வைரி சிவபெருமான் நாயகியே
சரணம்
உனது கடைவிழியாம் கருணையெனும் கிளிகள்
தனது விருப்பமான மாதுளை மணிகளெனும்
இந்திர நீலமணி பதித்த உன் தோடுடனே
தந்திரமாயாடிக் களிப்பதை வியந்தேன்
No comments:
Post a Comment