காதம்பினீ கிமயதே ந ஜலானுஷங்கம்
ப்ருங்காவலீ கிமுரரீ குருதே ந பத்மம் |
கிம் வா கலிந்ததனயா ஸஹதே ந பங்கம்
காமாக்ஷி நிஶ்சயபதம் ந தவாக்ஷிலக்ஷ்மீ: ||63||
कादम्बिनी किमयते न जलानुषङ्गं
भृङ्गावली किमुररीकुरुते न पद्मम् ।
किं वा कलिन्दतनया सहते न भङ्गं
कामाक्षि निश्चयपदं न तवाक्षिलक्ष्मीः ॥63॥
காமாக்ஷீ! மேகங்களின் கூட்டமானது நீரோடு இணையவில்லையா? வண்டுகளின் கூட்டமானது தாமரையின் சேர்க்கையை அடையவில்லையா? யமுனையானது, கங்கையைப் பொறுத்துக்கொள்வதில்லையா? ஆயினும், உன் கடாக்ஷ லக்ஷ்மியானது ஏன் சஞ்சலமில்லாமல் ஸ்திரமாய் இருக்கும் தன்மையை பெறாமலிருக்கிறது? இந்த ஸ்லோகத்தில் சலனத்தையே இயல்பாய் கொண்டவையெல்லாம், நிலைத்தன்மையை விரும்புகையில், தாயின் கடாக்ஷ சோபை மட்டும் நிச்சயமற்ற நிலைமையிலிருப்பதேன் என்று கேட்கிறார் மூககவி.
வியப்புடனே……
பல்லவி
வியப்புடனே உனைத் துதித்தேன் காமாக்ஷி
தயக்கமின்றி எனக்கருள்வாய் தாயே தயாபரி
அனுபல்லவி
அயனைப் படைத்த கேசவன் சோதரி
புயங்கன் சிவபெருமான் இடமமர்ந்தவளே
சரணம்
மேகங்கள் மழையாகி நீருடன் இணைகிறது
யமுனை தன் சலனம் விட்டு கங்கையை சேர்கிறது
திரியும் வண்டுகள் தாமரையை அடைகிறது
அலைபாயும் விழிமட்டும் சலனமுற்றிருப்பதேனோ
No comments:
Post a Comment