நடமினோ வேங்கடவன் வாழ் *
தண் திருமலை நோக்கிக் *
கிடமினோ மதி நாணும் அழகுடை *
மாலவன் கருவறைப் படி தன்னில் *
அடரும் இடையறா வினையகல *
இஞ்ஞாலம் உண்ட பிரான் *
இடரைக் களையும் திருவடியே நீவிர் *
தொழுமினோ அடி புகுமினோ.
****ஸ்ரீ திருவேங்கடத் திருவைந்து-1
வடவேங்கடம்…..
பல்லவி
வடவேங்கடம் தன்னில் காட்சி தரும் கேசவனை
தடையின்றித்துதித்திடுவாய் மனமே அனுதினமே
அனுபல்லவி
படமெடுத்த பாம்பணையில் பள்ளி கொண்ட நாரணனை
மடந்தையரலமேலு பத்மாவதி நேசனை
சரணம்
நடந்திடுவாய் கால்களே வேங்கடவன் தலம் நோக்கி
அடைந்திடுவாய் மாலோன் கருவறைப் படிதனையே
இடையறா வினையகல இடர்கள் நீங்கிடவே
தொடர்ந்து பிறவாத வரம் பெற வேண்டியே
No comments:
Post a Comment