நீறு தாங்கிய திருநுத லானை
நெற்றிக் கண்ணனை நிரைவளை மடந்தை
கூறு தாங்கிய கொள்கையி னானைக்
குற்ற மில்லியைக் கற்றையஞ் சடைமேல்
ஆறு தாங்கிய அழகனை அமரர்க்
கரிய சோதியை வரிவரால் உகளும்
சேறு தாங்கிய திருத்தினை நகருட்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே
பல்லவி
திருத்தினைநகர் வளர் சிவக்கொழுந்தீசனை
கருத்திலிருத்தி வணங்கித் துதித்திடுவோம்
அனுபல்லவி
கருநிற வண்ணன் கேசவன் நேசனை
கருணாகரனை வருமிடர் களைபவனை
சரணம்
திருநீறணிந்த நெற்றிக்கண்ணனை
ஒருகண் அந்த நெற்றியிலுடையவனை
வரிசையாய் வளையணிந்த அன்னை உமையை
ஒருபாகம் தனிலே வைத்திருப்பவனை
விரிசடைதனிலே நீரைச் சுமந்திருப்பவனை
அரிய ஒளியாகி அமரர் குலம் காப்பவனை
திரிபுரமெரித்தவனை பிறைநிலவணிந்தவனை
தருமம் தழைத்திடும் பெருமைக்குரிய
No comments:
Post a Comment