Monday, 1 August 2022

அருஞ்செயல் புரிந்திடும்……

 எந்த திருப்பாதத்தை சதா சர்வ காலமும்  மூம்மூர்த்திகளும் த்யானிக்கின்றார்களோ ,எந்த திருப்பாதத்தின் தூளிகளை கொண்டு சிருஷ்டியை நான்முகனும், எந்த திருப்பாதத்தை பத்மநாபனும் த்யானித்து சயனித்து கிடக்கின்றானோ, எந்த திருப்பாதத்தை பரமனும் நித்தம் சூடி கொண்டு அருள்பாலிகின்றானோ, எந்த திருப்பாதத்தை முப்பத்து முக்கோடி தேவர்களும் காண தவமாய் தவம் செய்து கிடக்கின்றனறோ, எந்த திருப்பாத்தின் விரல் நுனியில் ப்ரமாண்டங்கள் தோன்றி மறைகின்றதோ, எந்த திருப்பாதத்தை நினைப்பதாலும், தொழுவதாலும் செய்த ,செய்கின்ற சகல விதமான பாவங்களும் பஸ்பமாகின்றதோ,எந்த திருப்பாதத்தை சகல வேதங்களும் சரணடைகின்றதோ, எந்த திருப்பாதத்தை மாத்ருகா அக்ஷரங்கள் தாங்கின்றதோ, எந்த திருப்பாதத்தை தாங்குவாதால் சதாரண வார்த்தைகளும் மந்தர வடிவம் பொறுகின்றதோ,எந்த திருப்பாதத்தின் மகிமையை சலக தேவதைகளாளும் வர்ணிக்க இயலாதோ ,எந்த திருப்பாதம் அன்று காலனை ஓங்கி நிலத்தில் விழ வைத்ததோ, எந்த திருப்பாதம் மகிடன் மேல் நின்றதால் அதற்கும் மோட்சம் கொடுக்கபட்டதோ, எந்த திருப்பாதம் சகலத்திற்கும் ஆதாரமாக விளங்குகின்றதோ, எந்த திருப்பாதம் இங்கு பூவி சூழல மையமாக விளங்குகின்றதோ, எந்த திருப்பாதம் இங்கு சகலோரையும் காத்து ரக்ஷிக்கின்றதோ, எந்த திருப்பாதம் என்றைக்கும் சகலத்தையும் கட்டி ஆள்கின்றதோ அப்பேர்ப்பட்ட அந்த திருப்பாதத்தை அடியேனும் வணங்குகிறேன்.



                                                 அருஞ்செயல்  புரிந்திடும்……


                                                            பல்லவி

                                         அருஞ்செயல் புரிந்திடும் பெருமைக்குரிய உன்

                                         திருப்பாதம் பணிந்தேன் ஶ்ரீ லலிதாம்பிகையே

                                                        அனுபல்லவி

                                         திருப்பாத மகிமை சொல்வதற்கரியது

                                         திருப்பாதமே அகிலமனைத்தும் பணிவது                                  

                                                         சரணம்

                                         பிரமன் தனது சிருஷ்டியை உனது

                                         திருப்பாத தூளியின் துணையுடன் துவங்கினான்

                                         பரமசிவனுமுன் பாத தூளியை ச்சூடி

                                         அருள் தரும் பணியை இனிதே செய்கிறான்


                                         பரந்தாமன் கேசவனும் உன் பதம் துதித்தே

                                         அரவணைதனிலே சயனித்திருக்கிறான்

                                         முப்பத்து முக்கோடி தேவர்களனைவரும்

                                         எப்போதுமுன் பதம் காண விழைகிறார்


                                         ஈரேழு பதினான்கு உலகங்களனைத்துமுன்

                                         பாதவிரல் நுனியில் தோன்றி மறைகிறது

                                         திருப்பாத மகிமையால் பாவங்கள் தொலைகிறது

                                         மறைகளுன் சரணமே சரணடைகின்றது   


                                         காலனை உதைத்ததுன் திருப்பாதமே அந்த            

                                         பாதம் பணிந்த சொல் மந்திரமானது        

                                         வர்ணனைக் கடங்காததுன் திருப்பாதம்

                                         சகலரையும் காப்பதுன் திருப்பாதமே                                                                                                                                           


No comments:

Post a Comment