பொன்னும் மெய்ப்பொரு ளும்தரு வானைப்
போக மும்திரு வும்புணர்ப் பானைப்
பின்னை என்பிழை யைப்பொறுப் பானைப்
பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை
இன்ன தன்மையன் என்றறி வொண்ணா
எம்மா னைஎளி வந்தபி ரானை
அன்னம்வை கும்வ யற்பழ னத்தணி
ஆரூ ரானை மறக்கலு மாமே
பின்னை என்பிழை யைப்பொறுப் பானைப்
பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை
இன்ன தன்மையன் என்றறி வொண்ணா
எம்மா னைஎளி வந்தபி ரானை
அன்னம்வை கும்வ யற்பழ னத்தணி
ஆரூ ரானை மறக்கலு மாமே
பொழிப்புரை :
எனக்குப் பொன்னையும் , மெய்யுணர்வையும் , வழங்குபவனும் , அவை வாயிலாக உலகின்பத்தையும் , வீட்டின் பத்தையும் சேர்ப்பிக்கின்றவனும் , அதன்பின் யான் அவ்வின்பங்களை நுகரும்பொழுது செய்கின்ற பிழைகளைப் பொறுத்துக்கொள்பவனும் , பின்னர்ப் பிழைகளே வாராதவாறு அருள்செய்பவனும் , இன்ன தன்மையை உடையவன் என்று வரையறுத்து உணர ஒண்ணாத எங்கள் தலைவனும் , எனக்கு எளிவந்த பெருமானும் ஆகிய , அன்னங்கள் தங்கியுள்ள வயல்களை யுடைய பண்ணைகளையுடைய அழகிய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ !
நன்னலங்களருளும்…..
பல்லவி
நன்னலங்களருளும் ஆரூர் ஈசனை
சென்ன கேசவன் நேசனைத் துதித்தேன்
அனுபல்லவி
அன்னங்கள் நிறைந்த வயல்கள் சூழ்ந்த
பண்ணைகளுடைய் திவாரூர் தலத்துறை
சரணம்
பொன்னையும் தன்னைத்தானுணருமாற்றலையும்
இன்னுமென் பிழைபொறுத்து நல்வழி காண்பித்து
பின்னர் பிழை வாரா நிலையளித்தெனைக்காத்து
இன்ன தன்மையுடையானென சொல்லவியலாத
No comments:
Post a Comment