அலையும் குணமுடைய….,
பல்லவி
அலையும் குணமுடைய அலைமகளைத் துதித்தேன்
நிலையாச் செல்வம் தனை நிலைத்திருக்கச் செய்வாயென
அனுபல்லவி
கலைமகள் மலைமகள் நேசிக்கும் கடல் மகளை
இலைதனில் துயின்ற கேசவன் நாயகியை
சரணம்
விலைமதிப்பில்லாத பொருளனைத்தும் தருபவளை
அலைகடல் துயில்பவன் மார்பிலுறைபவளை
நிலையில்லாமல் அலைந்திடும் திருமகளை
கலைகளை ரசித்திடும் திருவென்னும் பெயராளை
No comments:
Post a Comment