கரிய நிறத்தழகனை….
பல்லவி
கரிய நிறத்தழகனை கண்ணனைக் கேசவனை
பிரியமுடனழைத்து பாடி மகிழ்ந்தேன்
அனுபல்லவி
கரியின் கொம்பொடித்த மதுசூதனனை
அரி நாராயணனை அனந்த சயனனை
சரணம்
பரிவுடனே தோழனுக்கு அருளளித்த மாதவனை
விரிசடையோன் சிவனும் நான்முகனும் பணிந்தேத்தும்
கிரிதரனைக்கமல நாபனை ஶ்ரீதரனை
தரிசனமெனக் கருள வேண்டுமெனத் துதித்து
No comments:
Post a Comment