திங்களும் ஞாயிறும்……
பல்லவி
திங்களும் ஞாயிறும் கண்களாய் விளங்கும்
மங்களம் தரும் மகாலக்ஷ்மியைப் பணிந்தேன்
அனுபல்லவி
பங்கயநாபன் கேசவன் மார்பிலுறை
தங்கநிறத்தாளைத் திருவென்னும் பெயராளை
சரணம்
தங்கும் பொருள் தரும் செல்வாம்பிகையே
சங்கும் சக்கரமும் கதையும் வைத்திருப்பவளே
எங்கும் கருட வாகனத்தில் விரைபவளே
பொங்கி எழுந்து கோலாசுரனை வதைத்தவளே
இங்குமங்குமலைபாயும் மனம் நிலைக்கச் செய்பவளே
சங்கடமிடர் களையும் வண்ணமிகு திருமகளே
அங்கமில் மன்மதனைப் படைத்தவளே தாயே
சிங்கார வடிவான அழகியே சுந்தரியே
சங்கரி கௌரி காமாக்ஷியும் நீயே
பங்கய மலரமர் கலைவாணியும் நீயே
அங்கயற்கண்ணி நீ அலமேலு மங்கை நீ
எங்களைக் காக்கும் ஶ்ரீலலிதாம்பிகையே
No comments:
Post a Comment