மிஸ்ரீபவத் கரள பங்கில ஶங்கரோரஸ்-
ஸீமாங்கணே கிமபி ரிங்கணமாததான: |
ஹேலாவதூத லலித ஶ்ரவணோத்பலோऽஸௌ
காமாக்ஷி பால இவ ராஜதி தே கடாக்ஷ: ||88||
கடாக்ஷ சதகம்
मिश्रीभवद्गरलपङ्किलशङ्करोरस्-
सीमाङ्गणे किमपि रिङ्खणमादधानः ।
हेलावधूतललितश्रवणोत्पलोऽसौ
कामाक्षि बाल इव राजति ते कटाक्षः ॥88॥
காமாக்ஷீ! உனது கடாக்ஷமென்கிற குழந்தை, சங்கரனாரின் கழுத்து விஷக்கருப்புடன் கலந்து, அவரது மார்பில் தவழ்ந்து விளையாடியும், அவர் காதில் வைத்திருக்கும் கருநெய்தல் மலரை எடுத்தெறிந்து வீசியும் விளையாடுகிறது!
தினமுனைப்…..
பல்லவி
தினமுனைப் பணிந்தேன் தேவி காமாக்ஷி
எனக்கருள வேண்டுமென மனமாரத் துதித்து
அனுபல்லவி
அனந்த சயனன் கேசவன் சோதரி
முனிவருமமரரும் வணங்கிடுமீச்வரி
சரணம்
உனது கடைக்கண் விழியெனும் மழலையொளி
அனங்கனின் வைரி கறைகண்டன் கழுத்திலுள்ள
கருநஞ்சில் பாய்ந்தும் அதனுடன் கலந்துமவர்
காதணியாம் கருநெய்தல் மலருடனுமாடிடுது
No comments:
Post a Comment