மனம் செல்லுமிடமெல்லாம்….
பல்லவி
மனம் செல்லுமிடமெல்லாம் நீயிருக்க வேண்டும்
தினம் துதித்தேன் தாயே சமயபுரத்தாளே
அனுபல்லவி
அனங்கனைப் படைத்த கேசவன் சோதரியே
தனம் பருத்தவளே தாயே கண்ணபுரத்தாளே
சரணம்
எனது சிரமிருக்குமிடமனைத்திலுமே
உனது திருவடி அமைந்திருக்க வேண்டும்
அனவரதம் நீயேயென் அருகிருக்க வேண்டும்
கனவிலும் நினைவிலும் உனை நினைக்கும் வரம் வேண்டும்
No comments:
Post a Comment