Monday, 31 March 2014
பிள்ளையாரப்பன்
பிள்ளையாரப்பன்
பல்லவி
கொள்ளை இன்பம் காண்பவர்க்களித்திடும்
பிள்ளையாரப்பனை மனமாரப்பணிந்தேன்
அனுபல்லவி
அள்ளக்குறையாத கருணையளித்திடும்
வள்ளலை வாரண முகத்தோனைக் கரிமுகனை
சரணம்
உள்ளத்தில் வைத்து மலரடி போற்றும்
நல்லடியார்க்கருளும் கேசவன் மருகனை
முள்ளாயுறுத்தும் பவநோய் தீர்த்திட
துள்ளி வரவேண்டுமென அனுதினம் துதித்து
யானை
யானை
பல்லவி
மதிதரும் கரிமுகனை
மதமுடையானை
கதியெனத்துதித்தேன்
இனியெனைப்படையானை
அனுபல்லவி
புதியவை தொடங்குமுன்
தும்பிக்கையானை
துதித்திடும் வழக்குடைய
மதிப்புடையானை
சரணம்
கதிரவன் ஒளியினும் ஒளியுடையானை
எதிரியை வெல்லும் படையுடையானை
விதியையும் மாற்றும் வலியுடையானை
மதியுடையானை அழகுடையானை
இடர்களை நீக்கும் பதிவுடையானை
விட அரவணிந்த இடையுடையானை
இடபம் கணங்கள் பணி கழலுடையானை
புடமிட்ட பொன்னை மோதகக்கையானை
பாசங்குசமேந்தும் கரமுடையானை
வாசமலர் மாலைக்கழுத்துடையானை
கேசவன் மருகனெனும் புகழுடையானை
ஈசன் மகனெனும் பேறுடையானை
அடியவர்க்கருளும் கருணையுடையானை
ஒடிந்த ஒற்றைக் கொம்புடையானை
தடித்த மத்தள வயிறுடையானை
வடிவுடையானை வனப்புடையானை
Sunday, 30 March 2014
குழலூதும் கேசவன்
குழலூதும் கேசவன்
பல்லவி
புன்னை மரத்தடியே புல்லாங்குழலூதி நிற்கும்
சென்னகேசவனை மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
கன்னங்கரியவனை ராதையின் காதலனை
தன்னொப்பாரில்லாத தேவாதிதேவனை
சரணம்
தன்னிலை மறந்து ஆவினங்களனைத்தும்
கன்னியரும் கோபியரும் ஆயர்குலத்தோரும்
இன்னிசையில் மயங்கி அசைவின்றி நின்றிருக்க
புன்னகை தவழும் இன்முகத்துடனே
Saturday, 29 March 2014
கோலகணபதி
கோலகணபதி
பல்லவி
பலவித கோலங்களில் காட்சிதரும் கணபதியை
நலமருள வேண்டுமென மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
சுலபமாய் பக்தர்கள் வணங்கிட வேண்டியே
எளிமையாயரச மரத்தடியே வீற்றிருக்கும்
சரணம்
மலைமகளும் சிவனும் கொஞ்சிடும் மைந்தனை
அலைமகள் நாதன் கேசவன் மருகனை
கலைமகளை மணந்த மலரயனும் முருகனும்
கலைஞரும் தேவரும் முனிவரும் பணிந்தேத்தும்
சுகவனேச்வரர்
சுகவனேச்வரர்
பல்லவி
சுகவநேச்வரனை கிளிவனநாதனை
அகம் குளிரக் கண்டு மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
புகழ்மிகு சேலம் பதிதனிலெழுந்தருளி
சொர்ணாம்பிகையுடன் காட்சியளித்திடும்
சரணம்
குகபெருமானும் இரட்டை கணபதியும்
சுகசனகாதியரும் கணங்களும் நந்தியும்
முகுந்தன் கேசவனும் பிரமனுமிந்திரனும்
சகலரும் பணிந்தேத்தும் மும்முடிநாதனை
Moolavar of this temple is Arulmigu Sugavaneshwarar.
வசந்த நவராத்திரியை முன்னிட்டு, சுகவனேஸ்வரர் கோவிலில் வரும், 31ம் தேதி முதல், 10 நாட்களுக்கு குங்கும லட்சார்ச்சனை நடக்கிறது. வசந்த நவராத்திரியை முன்னிட்டு, சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் மார்ச், 31ம் தேதி முதல் ஏப்ரல், 9ம் தேதி வரை தினமும் மாலை, 6.30 மணிக்கு, சொர்ணாம்பிகை அம்மனுக்கு குங்கும லட்சார்ச்சனை நடக்கிறது. லட்சார்ச்சனையின் போது, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டு, பதினாறு வகையான உபசாரங்களுடன் வேத மந்திரங்கள் முழங்க பூஜை செய்யப்படவுள்ளது. லட்சார்ச்சனைக்கு பயன்படுத்தும் குங்குமம், பூஜை முடிவில் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. ஏப்ரல், 8ம் தேதி ராமநவமி அன்று காலை, 8 மணிக்கு, 108 மூலிகைகளால் லலிதா சகஸ்ரநாம ஹோமம் நடக்கிறது.
The name of the god underliying because parrot get a wishes from this god.Other names of this god was Kili Vananathar,Babanasar,Pattesurar,Nahisar,Mummudinathar.Other names of Amman in this temple is Sornambigai,Maragathavalli,patchivalli.Vinayagar alies Valampuri Vinayagar (Irattai Vinayagar).These gods are "Mummoorthigal" of this temple.
Friday, 28 March 2014
மணித்வீப கணபதி
மணித்வீப கணபதி
பல்லவி
அருள் தரும் ஆனை முகத்தோனைத் துதித்தேன்
இருளகன்றிடவும் ஒளி பெருகிடவும் (மன )
அனுபல்லவி
திருமகள் நாயகன் கேசவன் மருகனை
பெருமைக்குரிய மனித்வீப கணபதியை
சரணம்
வருமிடர் நீங்கவும் தருமநெறி தழைக்கவும்
அருங்கலைகளிசை ஞானம்அனைத்தும் பெறவும்
கருணையுடன் கடைக்கண் வைத்தெனையாளவும்
அருமறை போற்றும் காரமர் மேனியனை
தீபம்
தீபம்
பல்லவி
திருவிளகேற்றி தினம் துதித்தேன் - மன
இருளகன்றிடவும் ஒளி பெருகிடவும்
அருள் தரும் ஸ்ரீலலிதா திரிபுரசுந்தரியின்
கருணை யைப்பெறவும் நன்மைகள் பெருகவும்
சரணம்
வருமிடர் நீங்கவும் தருமம்தழைக்கவும்
குருவருள் திருவருள் அனைத்தும் கிடைத்திடவும்
திருவாய் மேருவில் வீற்றிருக்கும் தாயின்
உருவாய் சோதியாய் சுடராய் விளங்கும்
எசப்பாட்டு
. கண்ணீர் காதல் கண்ணீர்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஆச களி எடுத்து
பாச நீர் தெளிச்சி ...
பிசஞ்சி இசவாக்கி....
பக்குவமா பதமாக்கி....
ஓங் கையும்
ஏங் கையும்
ஓர் கையா நாமாக்கி ....
செஞ்சு வச்ச ..
காதல் பானை ...
நெஞ்சு வெடிச்சி ...
செத்து போச்சி .....
கரிச காட்டுக்குள
கள்ளிச்செடி ஓரத்துல ...
கேப்ப களி திங்கையில...
நெஞ்சு குழி தின்னவளே ...
கண்ணால நாம் போட்ட ...
காதல் பல்லாங்குழி ஆட்டமெல்லாம் ....
பருத்தி பஞ்சா
பறந்து ....
பரலோகம்
போயிடிச்சி .....
பொங்கலுக்கு பான வச்சி
பொங்க சோறு பொங்க வச்சி
கரும்பு நீ கடிக்கையில ...
கட்டெறும்பா ஓன் எலும்புக்குள்ள ...
குறும்பா
நா புகுந்து ....
காதல் கொழம்பு வச்சி ...
கை நனச்ச ...
கரையாத .........
காலமெல்லாம் ...
கண்ணீரா
கரைஞ்சி போச்சி
நெலவுக்கே தெரியாம
நெலவ செற புடிச்சி ...
வளவுக்குள் நாம .
வசமா கட்டிவச்சி
இரவெல்லாம் வெதச்ச ..
கல்யாண கனவு வெத
கால் மொளச்சி
சொல்லாம
நெலவோட
ஓடி போச்சி
அய்யனார் சாமிக்கு ...
அருவா படைக்கையில ...
கொடுவா பார்வையாள
கொக்கி போட்டவளே ...
சிறுக்கி ஓன் கிறுக்கில் ....
சரிஞ்ச எங் காதல் குடல் ...
ஒனை உறிஞ்சி
நிமிர முன்ன
செரிக்காம
செத்துருச்சி ....
பக்குவமா பதுக்கி வச்ச
ரெண்டு பொஸ்தகத்து மயிலிறகா
உசுருக்குள
பொதச்சி வச்ச
ஓன் பெயரும்
என் பெயரும்
பருவத்து காத்தடிக்க
பொஸ்தகத்த
மறந்து போச்சி ...
றெக்க கட்டி வெவ்வேறா
எங்கோயோ ...
பறந்து
தொலஞ்சி
போச்சி ......
இப்படிக்கு -கீதமன்
எசப்பாட்டு
ஒம்பாட்டுக்கெசப்பாட்டு
நாம்பாடப்போகையிலே
எம்பாடு சங்கடமா
ரொம்ப சங்கடமா
போச்சுதெய்ய என்ன சொல்ல
நெக்குருகி காதல் கதெ
நான் கேட்டு பட்டுக்கிட்டேன்
இனிமே என்கதையை
என்னான்னு நாஞ்சொல்வேன்
காதலுக்கு கண்ணில்லெ
கண்ணீரு மட்டுந்தேன்
பூமிக்கே தெரியுமப்பு
அந்த
சாமிக்கும் தெரியுமப்பு
இப்படிக்கு 'அக்ரிஷ்'
Thursday, 27 March 2014
ஊஞ்சலாடும் கணபதி
ஊஞ்சலாடும் கணபதி
பல்லவி
.நூதனமாயூஞ்சலில் அமர்ந்தாடும் கணபதியை
மோதகக்கையானை மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
வேதங்கள் நான்கும் சங்கிலியாகவும்
நாதமந்திரங்கள் தாங்கும் பலகையுமாய்
சரணம்
நாதஸ்வரம் ஒலிக்க கீதங்கள் முழங்க
மாதரார் பாட்டிசைக்க வேதியர் மறையோத
பூதகணங்களும் நந்தியும் துதி பாட
மாதவன் கேசவனமரரும் பணிந்தேத்த
செல்வமுத்துக்குமரன்
செல்வமுத்துக்குமரன்
பல்லவி
செல்வமுத்துக்குமரனை சிங்காரவேலனை
வைத்தீஸ்வரன் மகனை மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
வல்லி தெய்வானையுடனிருக்கும் முருகனை
சொல்லுக்கடங்கானை கேசவன் மருகனை
சரணம்
வல்லரக்கன் சூரனை வதம் செய்தவனை
புள்ளி மயில் வாகனனை சேவற்கொடியோனை
அல்லும் பகலும் துதித்திடுமடியார்க்கு
நல்லகதியளித்திடும் கார்த்திகேயனை
.
Subscribe to:
Posts (Atom)