கூத்தபிரான்
பல்லவி
ஆடியபாதனை கூத்தபிரானை
அம்பலத்தில் கண்டு மனமாரத்துதித்தேன்
துரிதம்
மாடு மத்தளம் கொட்ட மதிபுனல் சடையும்
அரவும் குண்டலமும் அனைவருமுடனாடும்
அனுபல்லவி
நாடித்துதித்திடும் அடியவர்க்கருளும்
சூடிய பிறையுடை சிவபெருமானை
சரணம்
கோடி சூரியனொளியையும் மிஞ்சும்
ஈடிணையில்லாத ஒளியுடையவனை
வேடிக்கையாகப் பிரமனும் கேசவனும்
தேடிடும் அடிமுடி யுடைய பொற்பாதனை
காடுதனில் திரியும் சுடலை மாடனை
ஓடு தனையேந்தும் கபாலீச்வரனை
தோடுடைய செவியனை தேவாதி தேவனை
வீடு பேறளிக்கும் விச்வேச்வரனை
No comments:
Post a Comment