தங்க கணபதி
பல்லவி
தங்க கணபதியை மனமாரத்துதித்தேன்
செங்கதிரோன் ஒளியையும் மிஞ்சும் ஒளியுடைய
அனுபல்லவி
தங்கும் பொருளளிக்கும் மகாலக்ஷ்மியும்
செங்கண்மால் கேசவனும் நேசிக்கும் மருகனை
சரணம்
திங்கள் பிறையணிந்த சங்கரன் மகனை
துங்கக்கரிமுகத்துத்தூமணியை ஐங்கரனை
சிங்கார வடிவுடைய ஆனைமுகத்தோனை
எங்கும் நிறைந்திருக்கும் மங்கள மூர்த்தியை
No comments:
Post a Comment