ஞான விநாயகன்
பல்லவி
ஆனைமுகத்தோனின் கழலடி பணிந்தேன்
தேனினைச்சொரிந்து நாமங்கள் போற்றி
அனுபல்லவி
பானை வயிற்றோன் பரமதயாகரன்
தீனசரண்யன் கேசவன் மருகன்
சரணம்
ஆனந்த தாண்டவம் ஆடிடும் சிவன் மகன்
ஊனக்கொம்புடைய ஞானசூரியன்
வானுறை தேவரும் முனிவரும் பிரமனும்
மானுடரும் கணங்களும் நந்தியும் வணங்கிடும்
No comments:
Post a Comment