Tuesday, 18 February 2014

ஆனந்தகணபதி


ஆனந்தகணபதி 

பல்லவி 

அழகிய கரிமுகனை ஆனந்த கணபதியை 

மழலையில் கவிபாடி மனமாரத்துதித்தேன் 

துரிதம் 

முத்து பவளம் ரத்தினம் பதித்த 

அணிமணி மாலையும் ஆடையுமணிந்த 


அனுபல்லவி 

கழலடி பணிவோர்க்கு கருணை மழை பொழியும் 

வேழமுகத்தோனை வேதமுதல்வனை 

சரணம் 

பழனிமலைக்குமரன்  நேசிக்கும் சோதரனை 

குழலூதி மனம் கவரும் கேசவன் மருகனை 

குழந்தைக்கடவுளை  கொழுக்கட்டைப் பிரியனை 

நிழலென த்திருவடியில் நீங்காதிடம் பெறவே 








.




































No comments:

Post a Comment