வெள்ளைப்பிள்ளையார்( சுவேத கணபதி )
பல்லவி
உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகனை கணபதியை
வெள்ளைப் பிள்ளயாரைத் துதிப்பாய் மனமே
அனுபல்லவி
எள்ளளவு பக்தி செய்தாலும் போதும்
வெள்ளமெனக் கருணைமழை பொழிந்தருள் புரிவான்
சரணம்
உள்ளத்திலிருத்தி மனமுருகித் துதிப்போர்க்கு
வள்ளலாய் வரங்களை அள்ளி யளித்திடுவான்
முள்ளாயுறுத்தும் வினைப்பயன்களைவான்
கள்ளழகன் கேசவன் நேசிக்கும் மருகன்
No comments:
Post a Comment