முருகன் சிவசுப்பிரமணியன்
பல்லவி
முருகா என்றுனைக் கூவி யழைத்தேனே
உருகாதா உனது உள்ளம் எனக்காக
அனுபல்லவி
கருநிறவண்ணன் கேசவன் மருகா
திருவடி நிழலே சதமெனத் துதித்து
சரணம்
தருமபுரித்தலம்வளர் சிவசுப்ரமண்யனே
அருள் மழை பொழிந்திடும் கருணைக்கடலே
ஒருமுறை யேனும் எழையேனெனக்குன்
திருமுகதரிசனம் அளித்தாண்டருள்வாய்
No comments:
Post a Comment