கூத்தாடும் கணபதி
பல்லவி
கூத்தாடும் கணபதியை நடராசன் மகனை
காத்தருள வேண்டுமென நாளும் துதித்தேன்
அனுபல்லவி
சாத்திர புராணங்கள் வேதங்கள் போற்றும்
மூத்தவனை முடிவு இல்லாத கரிமுகனை
சரணம்
சாத்திய மாலைகளும் மத்தளமுமாட
நேர்த்தியுடன் கைகள் கோலாட்டம் போட
பார்த்தவர்கள் பரவசித்து உடன் சேர்ந்தாட
தோத்திரங்கள் செய்து முனிகணங்களாட
ஏத்தித்துதித்து சுரரரும் பதியுமாட
வாத்தியங்கள் வாசித்து அரம்பையருமுடனாட
நாற்றிசையும் நான்முகனும் கேசவனுமாட
போற்றிப் பணிந்து மூஷிகனுமாட
No comments:
Post a Comment