வரசித்தி விநாயகன்
பல்லவி
பணிந்தேன் வரசித்தி விநாயகனை
துணிந்தேன் அவனே துணை யெனக்கினியென
அனுபல்லவி
தணிகாசலனின் அன்புத்தமையனை
அணிமணியணிந்த கேசவன் மருகனை
சரணம்
வணிகமயமான மாயா உலகில்
கணினி வழியாகிலும் தரிசனம் செய்து
தணியாத பக்தியுடனவன் பதம் பணிவோர்க்கு
பிணியிடர் பவபயம் களைந்திடும் கரிமுகனை
No comments:
Post a Comment