நர்த்தன விநாயகன்
பல்லவி
நர்த்தன கணபதியின் பொற்பாதம் பணிந்தேன்
பர்வதவர்த்தினி பார்வதி மைந்தன்
துரிதம்
தத்தித்தகஜூணு தளாங்குதகஜுணு
தகதரிகிடவென ஜதியுடன் நடமிடும்
அனுபல்லவி
சர்ப்பங்களணிந்த சாது ஜனப்ரியன்
வர்மமில்லாதவன் கேசவன் மருகன்
கர்ம வினைப்பயனால் கட்டுண்டு இவ்வுலகில்
நிர்கதியாய் நிற்கும் ஏழையேனெனக்கு
நற்கதி யளித்திட வெண்டுமெனத்துதித்து
அர்ச்சனை புரிந்து ஆராதனை செய்து
.
No comments:
Post a Comment