Monday, 17 February 2014

கேசவன் (ஷோடசோபசாரம்)


                                                                   
                                                 

                  கேசவன் (ஷோடசோபசாரம்)      
                  பல்லவி
 நீர்வண்ணன் கேசவனை நெஞ்சாரத் துதித்தேன்
 பார் போற்ற வீற்றிருக்க ஆசனங்கள்  தந்து(1)
                    அனுபல்லவி
 சீருடனவனை ஆவாகனம் செய்து(2)
 நீரூற்றிக் காலலம்பி அருந்த நீரளித்தேன்(3)
               சரணம்
நீராட்டி அலங்கரித்துப்பட்டுடையும் தரித்து(4 & 5)
நாரணனவனுக்கு ஆபரணங்கள் பூட்டி(6)
சீரிய நெற்றியில் சந்தனம் குங்குமமிட்டு(7)
தூமலர் தூவீ  தீபங்கள் காட்டி(8&9&10)
பாயசம் சித்ரான்னம் அமுதுமளித்து(11)
நீர்வார்த்துக்(12)கரங்களில் தாம்பூலமும் கொடுத்து(13)
பேர்(14)சொல்லிப் புகழ் பாடி நீராஞ்சனம்(15)செய்து
ஈரெட்டுபசாரம் தினம் செய்து நமஸ்கரித்து(16)


No comments:

Post a Comment