Saturday, 15 February 2014

ஸ்ரீ மகாகணபதி


ஸ்ரீ மகாகணபதி

பல்லவி

கனிந்தருள் புரிவாய் மகாகணபதி

இனியெனக்குனது இணையடியே கதி

அனுபல்லவி

முனிவரும் தேவரும் நந்தியும் கணங்களும்

மனிதரும் வணங்கிடும் தாமரைப்பாதனே

சரணம்

பனிமலைநாதன் பரமசிவன் மகனே
  
புனிதனேகரிமுகனே கேசவன் மருகனே

சனியுடன் கோள்களும் அரனரி அயனும்

இனிது பணிந்திடும் விக்னவினாயகனே


No comments:

Post a Comment