தேனி பெத்தாச்சி விநாயகன்
பல்லவி
பூக்கோலம் கொண்ட பெத்தாச்சி கணபதியை
நாக்கினால் பாடி மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
ஆக்கல் காத்தலழித்தலென்னும்
முத்தொழில் புரிந்திடும் முழுமுதற்கடவுளை
சரணம்
நோக்கித்துதித்திடும் பக்தருக்கெல்லாம்
வாக்கு வன்மையும் நன்மனமும் பொருளும்
ஆக்கமுமூக்கமும்
அனைத்துமளித்து
காக்கும் கரிமுகனை கேசவன் மருகனை
No comments:
Post a Comment