Monday, 17 February 2014

அகிலாண்டேஸ்வரி

அகிலாண்டேஸ்வரி

பல்லவி 

அகிலாண்டேஸ்வரியை மனமாரத்துதித்தேன் 

இகபரமிரண்டிலும் சுகமளித்திடும் -  ஸ்ரீ 

துரிதம் 

அலைமகள்  கலைமகள் இருவரும் வணங்கிடும் 

மலைமகளைக் குலமகளை பங்கய பதத்தாளை 


அனுபல்லவி 

 முகில்வண்ண க்கண்ணன்  கேசவன் சோதரியை 

மகிடன் தலை கொய்த மாகாளி பைரவியை 

சரணம் 


சுகசனகாதியரும் தேவரும் மூவரும் 

குகசரவணனும் கணபதியும் சுரபதியும் 

சகலரும் புகழ்ந்தேத்தும் திரிபுரசுந்தரியை 

புகலிடம் நீயே தாயே யெனப்பணிந்து 

.






















No comments:

Post a Comment