கண்ணபிரான்
பல்லவி
புன்னை மரத்தடியே புல்லங்குழலூதும்
கண்ணன் திருவடியை மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
பன்னகசயனன் பாற்கடல் வாசன்
தன்னிரு தேவியர் உடனிருக்கும் மாதவன்
சரணம்
தன்னிகரில்லாத தாமரை நாபன்
தென்னிலங்கை யரக்கனை வதம் செய்த ஸ்ரீராமன்
முன்வினைப்பயன் நீக்கும் முகுந்தன் கேசவன்
No comments:
Post a Comment