ஓங்கார விநாயகன்
பல்லவி
ஓங்காரப் பொருளே விக்ன விநாயகா
பாங்குடனே உந்தன் மலர்ப் பாதம் பணிந்தேன்
அனுபல்லவி
தூங்காமல் தூங்கும் கேசவன் மருகா
ஓங்கு புகழுடையோனே அடியார்க்கருள்பவனே
சரணம்
தீங்கனியும் கரும்பும் தெளிதேனும் படைத்து
நீங்காதுன் நாமம் நெஞ்சகத்தில் வைத்து
தாங்கித்துதிப்பவர்க்கு நலமனைத்துமளிப்பவனே
ஐங்கரனே கரிமுகனே ஆண்டருள வேண்டுமென
No comments:
Post a Comment