பழனியாண்டி
பல்லவி
சங்கரி தனயனைப்
பழனியாண்டியை
அங்கம் புழுதிபட வந்தனை
புரிந்தேன்
அனுபல்லவி
பொங்கும் மூவாசைப்பிணி
போக்கும் முருகனை
பங்கய பதத்தானை தண்டாயுதபாணியை
சரணம்
தங்கத்திருமேனியும்
செம்பவள வாயும்
திங்களைப் பழிக்கும்
திருமுக அழகுமுடை
எங்கும் நிறைந்திருக்கும்
சிங்காரவேலனை
பங்கயநாபன் கேசவன் மருகனை
No comments:
Post a Comment