ஜகன்னாதன்(உலகநாதன்) மருகன்
பல்லவி
மலர்மாலையலங்காரம்
புனைந்த கணபதியை
வலம் வந்து கரம் கூப்பி
மனமாரத்துதித்தேன்
துரிதம்
மல்லி முல்லை
மருக்கொழுந்து
அல்லி கமலம் ஆகிய பலவித
அனுபல்லவி
உலகநாதன் கேசவன் மருகனை
பலர் போற்றும் நலமளிக்குமானைமுகத்தோனை
சரணம்
கலைகளியலிசை ஞானம்
நல்கிடும்
கலாரசிகனை வேலனின் தமயனை
வலஞ்சுழி ஐங்கரனை மலைமகள்
மகனை
குலம் கல்வி
செல்வம்ளித்திடும் கரிமுகனை
No comments:
Post a Comment