Tuesday, 4 February 2014

முந்தி விநாயகன் புலியக்குளம்



 முந்தி விநாயகன் புலியக்குளம் 


பல்லவி 


முந்தி விநாயகனை வந்தனை புரிந்தேன் 

புலியக்குளம் தலத்தில்  உயர்  கோபுரம்கொண்ட   


அனுபல்லவி 

தந்தி முகத்தோனை தாமரைப்பதத்தினனை 

வந்திப்பவர்க்கருளும் சுந்தர வடிவினனை 


சரணம் 

இந்த்ராதி தேவரும் முனிவரும் கணங்களும்

நந்தியும்  நான்முகனும் கேசவனும்  சிவனும் 

சந்திரசூரியனும் கோள்களும்  பணிந்திடும் 

இந்தினிளம்பிறையணிந்த கரிமுகனை 














No comments:

Post a Comment