கண்ணன்
பல்லவி
ஒரு முறை கண்டாலே போதும் கண்ணா
திருமுக தரிசனம் மாயனே மணி வண்ணா
அனுபல்லவி
திருமகள் மணி மார்பா தீனசரண்யா
கருமுகில் வண்ணனே குருவாயுரப்பா
சரணம்
திருடனே என்மனத்தை அபகரித்தவனே
குருவும் தந்தையும் தாயும் நீயே
வருமிடர் களைந்தெனை காத்தருள்வாயே
கருணைக் கடலே கேசவா மாதவா
No comments:
Post a Comment