மாணிக்க கணபதி
பல்லவி
மனம் கவர் மாணிக்க கணபதியை சிவன் மகனை
மனமாரப் பணிந்தேன் மனம் களிப்படைந்தேன்
துரிதம்
முனிவர்கள் தேவர்கள் கணங்கள் நந்தி
மனிதர்கள் நான்முகனனைவரும் வணங்கிடும்
அனுபல்லவி
அனந்த சயனன் கேசவன் மருகனை
வினைகளை க்களைந்திடும் விக்ன விநாயகனை
சரணம்
முனைப்புடன் துதித்திடும் அடியவர்க்கெல்லாம்
தனம் குலம் கல்வியனைத்தையுமளித்திடும்
அனாதநாதனை அறுபகை யறுப்பவனை
எனையாண்டருளவே அனுதினம் துதித்து
.
No comments:
Post a Comment