Monday, 24 February 2014

ஆற்றாமை




 ஆற்றாமை

  என்னுயிர்க்காதலி
  எங்கே நீ சென்றாயோ
  இறந்த பின்னுன்னை
  அதிகம்  நேசித்தேன்
  இருக்கும் தருணத்தில்
  உனதருமை அறியாததால்;
  நினைவை விட்டு நீயகலவேயில்லை
  அதனாலுன்னை நான் மறக்கவேயில்லை;
  சிறகை விரித்துப்
  பறந்து நீ சென்றாய்
  நரக வேதனை அளித்துச் சென்றாய்
  கிரகங்கள் செய்த சோதனையோ
  பரம்பொபொருள் தந்த வேதனையோ
  கனவு கண்டு நாம் வாழ்ந்த நாட்களின்
  நினைவுகளோடு காத்திருக்கிறேன்
  இறந்த பின்னுன்னை
  வந்தடைந்திடவே !



























.

No comments:

Post a Comment