போரிவில்லி வஜிரா நாக சிந்தூரகணபதி
பல்லவி
சிந்தூரகணபதியை சித்திவினாயகனை
சிந்தையில் வைத்து சீரடி போற்றினேன்
துரிதம்
இந்திரன் நந்தி கணங்கள் முனிவர்கள்
கந்தன் பிரமன் அனைவரும் துதித்திடும்
அனுபல்லவி
விந்தையாய் தானாக எழு ந்தருளிக்காட்சிதரும்
தந்திமுகத்தோனை கேசவன் மருகனை
சரணம்
பந்தபாசத்தளைகளை களைந்திட
முந்தைய பழவினைப் பயன்கள் தொலைந்திட
குந்தகமின்றி காரியம் நடைபெற
அந்தமுமாதியும் இல்லாதவனை
No comments:
Post a Comment