மூலமந்திரம் : ஓம் கம் கணபதயே நம
ஏகாக்ஷர கணபதி:
பல்லவி
கம் கணபதே நமோ நமோ
சங்கரன் புதல்வா நமோ நமோ
துரிதம்
உம்பரும் முனிவரும் கணங்களும் நந்தியும்
அமரேந்திரனும் பிரமனும் வணங்கிடும்
அனுபல்லவி
குங்கும நிறமும் பங்கய பங்கய பதமும்
அங்குசபாசமுமுடைய கரிமுகனே
சரணம்
தங்கு தடை நீக்கும் தந்தி முகத்தோனே
பங்கய நாபன் கேசவன் மருகனே
திங்கள் பிறை யணிந்த மங்களமூர்த்தி
எங்கும் நிறைந்திருக்கும் ஓங்காரப் பொருளே
No comments:
Post a Comment