Thursday, 13 February 2014

திருவீழிமலை நடராஜன்


திருவீழிமலை நடராஜன்
பல்லவி

பெற்றவனும் நீயே பிறப்பிறப்பறுக்க
உற்றவனும் நீயெனப் பற்றினேனுன் பதம்
அனுபல்லவி
நற்றவமுனிவரும் நான்மறையும் போற்றும்
கொற்றவனே வீழிமலை வீற்றிருக்கும் சிவனே
சரணம்
பற்றற்றவர் பற்றும் திருக்கயிலை நாதனே
புற்றிலுறைபவனே கேசவன் நேசனே
குற்றம் குறையில்லாத குணக்குன்றே கூற்றுவனே
எற்றிசையும் புகழ் விளங்கும் ஆடல் கலையரசே



No comments:

Post a Comment