Sunday, 2 February 2014

ஸ்ரீ ராஜகணபதி



ஸ்ரீ ராஜகணபதி

பல்லவி

ஸ்ரீராஜகணபதியின் அரவிந்த பதம் பணிந்தேன்
தீரா வினைதீர்க்கும் வாரணமுகத்தோன்

அனுபல்லவி

தாராளமாயருள் பணிவோர்க்களித்திடும்
ஆராவமுதன் கேசவன் மருகன்

சரணம்

மாரனும் நாணும் பேரெழில் வடிவினன்
காரமர் மேனியன் கரிமுகன் சதுர்புஜன்
ஈராறு கரமுடைய அறுமுகன் சோதரன்
பாரோர் பணிந்தேத்தும் வேழமுகத்தோன்










No comments:

Post a Comment