Wednesday, 5 February 2014

கோட்டை கணபதி



                கோட்டை கணபதி

பல்லவி

கோட்டை கணபதியின் மலர்ப் பதம் பணிந்தேன்
ஓட்டினையேந்திடும் ஈசன் தலைமகன்

அனுபல்லவி

வாட்டாற்றில் பள்ளிகொண்ட கேசவன் மருகன்
நாட்டமுடன் துதிக்கும் பக்தருக்கருள்பவன்

சரணம்

ஆட்டிடும் காது மடல்களைக் கொண்டவன்
மேட்டிமையுடையவன் கணங்களின் தலைவன்
நாட்டிய நாடகக்கலைகளின் ரசிகன்
சேட்டைகள் புரிந்திடும் குழந்தைக்கடவுள்











No comments:

Post a Comment