Wednesday, 5 February 2014

வேழமுகத்தோன்




வேழமுகத்தோன்

பல்லவி

வினைகள் தீர்க்கும் வேழமுகத்தோனே
உனையே துதித்தேன் எனையாண்டருள்வாய்

அனுபல்லவி

முனைப்புடன் துதித்திடுமடியவர்க்கெல்லாம்
சுனை நீராய்க்கருணையளித்திடும் கரிமுகனே

சரணம்

இனிது கருமங்கள் தடையற நடைபெற
அனைவரும் முதலில் வணங்கிடும் கணபதியே
வனப்பு மிகுந்த வாரணமுகனே

அனைத்துக்கும் முதலே கேசவன் மருகனே


















No comments:

Post a Comment