சித்தி விநாயகன்
பல்லவி
சித்திவினாயகன் பாதம் பணிந்தேன்
எத்தனை முறையவனைக் கண்டாலும் சலிக்காத
அனுபல்லவி
வித்தகர் ஞானியர் சித்தர்கள் யோகியர்
புத்தியில் விளங்கும் மத்தள வயிற்றினன்
சரணம்
சித்தத்திலிருத்தி துதிப்பவர்க்கெல்லாம்
தித்திக்கும் அருளமுதமளித்திடும் கரிமுகன்
பித்தன் சிவன் மகன் கேசவன் மருகன்
நித்தமுமவன் நாமம் நாவாரத்துதித்து
No comments:
Post a Comment