ஒளிந்திருக்கும் ஒளி மிகு கணபதி
பல்லவி
ஒளிந்திருக்கும் கணபதியை உள மாரத்துதித்தேன்
நல்லருள் பெறவே உள்ளத்தினுள்ளே
அனுபல்லவி
பளிச்சென விளங்கிடும் பளிங்குத் திருமேனியும்
ஒளிமிகு கண்களும் ஓங்கார வடிவும் கொண்டு
சரணம்
எளிய கடவுளாய்க் கலியுகம் தனிலே
களிப்புடன் தோன்றி அருள் தரும் கரிமுகனை
நளின நாபன் கேசவன் மருகனை
வளி யொளி வானாய் நீராய் நிலனாய்
No comments:
Post a Comment