எப்போதும் முப்போதும்…..
பல்லவி
எப்போதும் முப்போதுமுனையே துதித்தேன்
தப்பேதும் வாராமல் எனைக்காக்கும் கேசவனே
அனுபல்லவி
அப்போதைக்கிப்போதே உன் நாமம் சொன்னேன்
இப்பிறப்பிலெனக்கருளும் ஒப்பிலா அப்பனே
சரணம்
ஒப்பாரும் மிக்காருமில்லாத தேவனே
அப்பாலுக்கப்பாலாய் விளங்கும் பரம்பொருளே
நப்பின்னை தொழுதேத்தும் நாராயணனே
இப்பிரபஞ்சமே போற்றும் கமலநாபனே
No comments:
Post a Comment