அற்ப வாழ்வு…….
பல்லவி
அற்ப வாழ்வு சதமில்லையென்றறிந்தே
கற்பகமே உந்தன் கழலடி பணிந்தேன்
துரிதம்
பற்பல தேவரும் அமரேந்திரனும் நாரதர்
சுகசனகாதியருடனே
கற்றவர் முனிவர்கள் அரனயனரியும்
மற்றுமனைவரும் வணங்கிடுமன்னையே
அனுபல்லவி
கற்பனைக்கெட்டாத பேரழகுடையவளே
சர்வமும் நீயே கேசவன் சோதரியே
சரணம்
விற்பன்னர்கள் போற்றும் அருமறைப்பொருளே
தற்பரன் கபாலியின் இடப்பாகமமர்ந்தவளே
சொற்களுக்கடங்காத செயல்கள் புரிபவளே
நற்கதியருள்வாயென உனையே துதித்தேன்
பற்பல தேவரும் அமரேந்திரனும் நாரதர்
சுகசனகாதியர் மற்றும்
கற்றவர் முனிவர்கள் அரனயனரியும்
மற்றுமனைவரும் வணங்கிடுமன்னையே
No comments:
Post a Comment