1. மருந்தை உட்கொள்ளும் பொழுது , அவனை நினைத்தால் - விஷ்ணு,
2. உணவை உட்கொள்ளும் பொழுது அவனை நினைத்தால் - ஜனார்த்தனன் ,
3. படுக்கச் செல்லும் பொழுது அவனை நினைத்தால் - பத்மநாபன்,
4. திருமணத்தின் பொழுது அவனை நினைத்தால் - பிரஜாபதி,
5. யுத்தம் செய்யும் பொழுது அவனை நினைத்தால் - சத்ரதாரி,
6. வெளியில் கிளம்பும் பொழுது அவனை நினைத்தால் - திரிவிக்ரமன்,
7. நண்பனாய் அவனைப் பார்க்கும் பொழுது - ஸ்ரீ தரன் ,
8. கெட்ட கனவு காணும் பொழுது அவனை நினைத்தால் - கோவிந்தன்,
9. கஷ்டம் வரும் போது , அவனை அழைத்தால் - மதுசூதனன்,
10. காடுகளில் செல்லும் பொழுது - நரசிம்மனாக தம்மை அண்டியவர்களைக் காப்பவன் ,
11.நெருப்பால் துன்பம் வரும் பொழுது, அவனை நினைத்தால் அவனே - ஸ்ரீ மகாவிஷ்ணு ,
12.தண்ணீரால் துன்பம் ஏற்படும் பொழுது அவனை நினைத்தால் அவனே - ஸ்ரீ வராகன்,
13.ஆபத்தான மலையின் மீது ஏறும் சமயத்தில் அவன் நாமத்தை நினைக்கும் பொழுது அவனே -ஸ்ரீ ராமன்,
14. நடக்கும் பொழுது உள்ளத்தால் அவன் பாதம் பற்றினால் அவனே - வாமனன், 15.இறக்கும் தருவாயில் அவன் நமக்கு - நாராயணன்,
16. எல்லாச் சமயங்களிலும் பக்தனுக்கு அருள ஓடோடி வருவதில் அவன் - மாதவன்.
இம்மையிலும் மறுமையிலும்….
பல்லவி
இம்மையிலும் மறுமையிலும் கேசவனே நம் துணை
வெம்பவக் கடல் கடக்க அவன் துணையை நாடிடுவோம்
அனுபல்லவி
செம்மையுடன் நம்மை அன்போடணைத்து
அம்மையப்பனாயிருந்து அனைவரையும் காப்பவன்
சரணம்
மருந்துண்ணும் வேளையிலும் திருமாலை நினைப்போம்
விருந்துண்ணும் போதும் ஜனார்த்தனனைத் துதிப்போம்
இருந்துறங்கும் வேளையிலும் பதுமநாபனவன் நினைவே
திருமணத்தின் போதந்த பிரஜாபதியைத் துதிப்போம்
பொருது செய்யும் நேரமந்த சக்ரதாரியைத் துதிப்போம்
கருதிடுவோம் வெளிச்செல்கையில் நாமே
திரிவிக்கிரமன் வாமனனவன் நாமம் தனையே
ஶ்ரீதரனை என்றும் நம் தோழனாய் நினைப்போம
துர்சொப்பனம் கண்டால் கோவிந்தனை அழைப்போம்
துன்பம் நேர்கையில் மதுசூதனனை துணைகொள்வோம்
கானகத்தில் செல்லும் போது நரசிம்மனைத் துதிப்போம்
நெருப்பாலிடர் வரின் விஷ்ணுவைத் துதிப்போம்
நீரால் வருந்துயரை வராகன் தீர்த்திடுவான்
ஶ்ரீராமன் காத்திடுவான் மலையேறும் நேரத்தில்
நடக்கும் பொழுதெல்லாம் நாராயணன் துணையிருப்பான்
எல்லா வேளையிலும் நமைக் காப்பான் மாதவன்
No comments:
Post a Comment